Monday, 5 October 2015

காதுகளற்று





நிறுத்தம் நெருங்குகையில்தான்
பேருந்துக்குள்                                                                                      
மிதக்கத் தொடங்குகிறது 

நினைவோ ஒரு பறவை பாடல்.
இறங்க மனமேயில்லாமல் 
படியில் தவித்து நிற்கிறேன்.
நடத்துனர் தோளைப்  பிடித்து தள்ளுகிறார் 
இளையராஜா காதைப் பிடித்து இழுக்கிறார்
சட்டென காதுகளை கழட்டி
இளையராஜாவிடம் கொடுத்துவிட்டு
வீடு திரும்பிக்கொண்டு இருக்கிறேன்.
எம்.ஸ்டாலின் சரவணன்

No comments:

Post a Comment